8 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்ய இந்தியா ஒப்பந்தம்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

8 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தங்களை இந்தியா பெற்று உள்ளது.

2017-2018ம் ஆண்டில் நாட்டின் சர்க்கரை ஏற்றுமதி 32.5 மில்லியன் டன்களாக இருந்தது. 2018- 2019ம் ஆண்டிலும் இதே அளவு உற்பத்தி ஆகி உள்ளது.

2018-ல் 32 மில்லியன் டன் உற்பத்தியுடன் உலகிலேயே சர்க்கரை உற்பத்தியில் இந்தியா பெரிய உற்பத்தியாளராக திகழ்கிறது. உள்நாட்டு தேவையை விடவும் கூடுதல் சர்க்கரை கையிருப்பில் உள்ளதால் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கையைத் தொடங்கி உள்ளது.

இதன் ஒரு பகுதியாக இலங்கை, மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து ஏற்றுமதிக்கான ஒப்பந்தங்களை இந்தியா பெற்று உள்ளது. 6 லட்சம் டன் மூல சர்க்கரையும் 2 லட்சம் டன் வெள்ளை சர்க்கரையும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. 

சீனாவிற்கு சரக்கரை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்புதலும் கிடைத்து உள்ளது. இந்தோனேஷியாவிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக  இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் மற்றும் சீன அரசால் நடத்தப்படும் பொதுத் துறை நிறுவனமான காஃப்கோ இடையே 15 ஆயிரம் டன்  சர்க்கரை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது. 
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து சீனாவுக்கு இரண்டு மில்லியன் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் துறைமுகங்களில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவுக்கு உட்பட்டு அமைந்துள்ள சர்க்கரை ஆலைகளுக்கு போக்குவரத்து மானியமாக ஒரு டன்னுக்கு ரூபாய் ஆயிரமும், கடலோர மாநிலங்களின் துறைமுகத்திலிருந்து 100 கிமீ தொலைவை தாண்டி உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு போக்குவரத்து மானியமாக ஓர் டன்னுக்கு ரூ.2500-மும், கடலோர மாநிலங்களைத் தவிர வேறு மாநிலங்களில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு போக்குவரத்து மானியமாக ஒரு டன்னுக்கு ரூ.3 ஆயிரமும் அரசாங்கம் சார்பாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.   

மூலக்கதை