நாளை விண்ணில் பாய்கிறது ஜிசாட்-29

தினமலர்  தினமலர்
நாளை விண்ணில் பாய்கிறது ஜிசாட்29


சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ ஜிசாட்-29 என்ற செயற்கைகோளுடன்- ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3- டி2 ராக்கெட் மூலம் தயாரித்து விண்ணில் ஏவதிட்டமிட்டுள்ளது.. இது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நாளை மாலை 5 மணிக்கு விண்ணில் ஏவுகிறது.
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:- ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3- டி2 ராக்கெட் 3 நிலைகளை கொண்ட ஒரு கனரக வகை ராக்கெட்டாகும். இதில் முதல் நிலைகளில் திட எரிபொருளும், 2-வது நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு உள்ளன. 3-வது நிலையில் கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. 10 டன் எடை கொண்ட பொருட்களை சுமந்து செல்லும் வகையில் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டு இருந்தாலும், 4 டன் எடை கொண்ட செயற்கைகோளை சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தும் திறன் கொண்டது.தற்போது 3 ஆயிரத்து 423 எடை கொண்ட ஜிசாட்-29 செயற்கைகோளை சுமந்து செல்கிறது.


மூலக்கதை