ஹெரால்டு வழக்கில் ராகுல் மனு : இன்று விசாரணை

தினமலர்  தினமலர்
ஹெரால்டு வழக்கில் ராகுல் மனு : இன்று விசாரணை

புதுடில்லி : 'நேஷனல் ஹெரால்டு' ஆங்கில பத்திரிகை நிறுவனத்தை வாங்கியதில் முறைகேடு செய்ததாக, காங்கிரஸ் தலைவர் ராகுல், அவரது தாய் சோனியா உள்ளிட்டோர் மீது வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில், 2011 - 12 நிதியாண்டுக்காக, அவர்கள் தாக்கல் செய்த வருமான வரி கணக்கை மீண்டும் விசாரிப்பதை எதிர்த்து, இருவரும் தாக்கல் செய்த மனுவை, டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.

மூலக்கதை