பொதுநல வழக்கு தள்ளுபடி: மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் அதிருப்தி

தமிழ் முரசு  தமிழ் முரசு
பொதுநல வழக்கு தள்ளுபடி: மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் அதிருப்தி

புதுடெல்லி: பொதுநல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே. கே. வேணுகோபால், நீதிபதிகளின் செயல்பாட்டுக்கு கடும் அதிருப்தியை தெரிவித்தார். பிரதமர், மாநில முதல்வர்கள், மத்திய மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகள், மக்களுக்கு செய்யும் பணிகளை மாதம் மாதம் அறிக்கையாக வெளியிட வேண்டும் எனக்கூறி, உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், ‘‘என்ன மனு இது? பதிவாளர் எப்படி இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்ய அனுமதிக்கிறார்’’ எனக்கூறி, பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.



அப்போது குறிக்கிட்ட மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே. கே. வேணுகோபால், ‘‘எதையும் கேட்காமல் நீதிபதிகள் வழக்குகளை தள்ளுபடி செய்வது சரியானது அல்ல. ஆயிரம் கிலோமீட்டர் தாண்டி மக்கள் வந்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்கிறார்கள்.

ஆனால் நீதிபதிகள் அவர்களது மனுவை படித்துவிட்டோம்; எனவே கேட்பது ஒன்றும் இல்லை எனக்கூறி அவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் வாதங்கள் எதையும் கேட்காமல் தள்ளுபடி செய்கிறீர்கள். இது சரியானதாக எனக்கு படவில்லை.

இது அவர்களை புண்படுத்தும் விதமாக உள்ளது’’ என்றார்.



.

மூலக்கதை