உத்திரக்கண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி: ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவு

தினகரன்  தினகரன்
உத்திரக்கண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி: ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவு

உத்திரகண்ட: உத்திரக்கண்ட் மாநிலத்தில் அதிகாலையில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்தனர். உத்தரகண்ட் மாநிலம் பித்தோராகர் மாவட்டத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவானது. நிலநடுக்கத்தின் பாதிப்பு மற்றும் சேதங்கள் போன்ற விவரங்கள் குறித்து எந்தவித தகவல்களும் வெளியாகவில்லை. அமெரிக்காவின் புவியியல் ஆய்வு குழு மேற்கொண்ட சர்வேயில் இந்த நிலநடுக்கம் நேபாளத்தில் மையம் கொண்டிருந்ததாகவும், இது ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள உத்தரகண்ட் மாநிலத்தின் பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள தார்சூலா என்னும் பகுதியில் எதிரொலித்ததாகவும் தெரிவித்துள்ளனர். இந்த பூகம்பம் நேற்று அதிகாலை சுமார் 12.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது. மேலும் நேற்றைய தினம் பித்தோராகர் பகுதியில் இரண்டு முறை நில நடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று அதிகாலை சரியாக 12.38 மணிக்கு ஒருமுறையும், பிறகு 12.45 மணிக்கு உணரப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வானிலை துறை பித்தோராகர் பகுதியில் ஒருமுறை மட்டுமே நிலநடுக்கம் வந்ததாக தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். மேலும் இந்த நிலநடுக்கத்தின் ஆழம் கிட்டத்தட்ட 10 கி.மீட்டராக பதிவாகி உள்ளது என யூஎஸ்ஜிஎஸ் தெரிவித்துள்ளது.

மூலக்கதை