மகளிர் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்: மிதாலி அதிரடியில் இந்தியா வெற்றி

தமிழ் முரசு  தமிழ் முரசு
மகளிர் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்: மிதாலி அதிரடியில் இந்தியா வெற்றி

கயானா: ஐசிசி மகளிர் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த போட்டியில் மிதாலி ராஜ் அதிரடியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. கயானாவில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.

பூனம் யாதவ் மற்றும் ஹேமலதா ஆகியோர் திறமையாக பந்து வீசி பாக். அணி வீராங்கனைகளுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். இருவரும் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதையடுத்து 20 ஓவர்களில் பாக். அணி 7 விக்கெட் இழப்புக்கு, 133 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்த அணியின் பிஸ்மா மரூஃப் மற்றும் நிடா டர் ஆகியோர் அரை சதம் அடித்தனர்.

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய மிதாலி ராஜ், 47 பந்துகளில் 56 ரன்களை குவித்து, அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இந்தியா 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இத்தொடரின் முதல் போட்டியில் வலுவான நியூசிலாந்து அணியை வீழ்த்திய இந்திய அணி, பாக். அணியை வீழ்த்தியதன் மூலம் தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்திய மகளிர் அணி வரும் 15ம் தேதி கயானாவில் நடைபெறும் போட்டியில் அயர்லாந்து மகளிர் அணியுடன் மோதவுள்ளது.


.

மூலக்கதை