பல்வேறு பணிகளை முடிப்பதற்கான நிதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் தான் கிடைத்தது: பிரதமர் மோடி பேச்சு

தினகரன்  தினகரன்
பல்வேறு பணிகளை முடிப்பதற்கான நிதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் தான் கிடைத்தது: பிரதமர் மோடி பேச்சு

சத்தீஸ்கர்: பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் வளர்ச்சித் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த முடிந்ததாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரில் இன்று 18 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது. வரும் 20-ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் பிலாஸ்பூரில் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சாலை அமைத்தல், மின்வழங்கல், ரயில்வே மின்மயமாக்கல், பள்ளிகள் கட்டுதல் எனப் பல்வேறு பணிகளை முடிப்பதற்குத் தேவையான நிதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் தான் கிடைத்ததாக தெரிவித்தார்.பணமதிப்பிழப்பு நடவடிக்கை பதுக்கப்பட்ட பணத்தை வெளிக்கொண்டுவந்ததாகவும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான போலி நிறுவனங்கள் ஒழித்துக் கட்டப்பட்டதாகவும் தெரிவித்தார். பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கருப்புப் பணம் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதால் நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த முடிந்ததாக கூறினார். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒரு ரூபாயை அரசு செலவிட்டால் அதில் 15காசுதான் மக்களுக்குச் சென்றதாகவும் 85காசு எங்குச் சென்றதென்றே தெரியவில்லை என்றும் கூறினார்.

மூலக்கதை