மக்ரோனுடனான சந்திப்பை இரத்துச் செய்த இஸ்ரேல் பிரதமர்!!

PARIS TAMIL  PARIS TAMIL
மக்ரோனுடனான சந்திப்பை இரத்துச் செய்த இஸ்ரேல் பிரதமர்!!

நேற்றைய முதலாம் உலக யுத்தத்தின் நூற்றாண்டு நினைவெழுச்சியில் கலந்து கொண்ட உலகத் தலைவர்களில், இஸ்ரேலியப் பிரதமர் பென்யமின் நெத்தான்யாகூ அவர்களும் ஒருவர்.
 
பிரான்ஸ் வந்திருந்த பென்யமின் நெத்தான்யாகூ, இன்று திங்கட்கிழமை காலை, 10h00 மணிக்கு, பிரான்சின் ஜனாதிபதி எமானுவல் மக்ரோனுடன் பிரத்தியேகச் சந்திப்பை நடாத்துவதற்கான நிகழ்ச்சி நிரலை, பல நாட்களிற்கு முன்னரே பதிவு செய்திருந்தார்.
 
ஆனால் இந்தச் சந்திப்பானது இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
 
நேற்றிரவு, இஸ்ரேலின் காசா பகுதியில், பெரும் பதற்ற நிலையும், பாதுகாப்பு அச்சுறுத்தலும் ஏற்பட்ட நிலையில், இஸ்ரேலிய பிரதமர் உடனடியாக நேற்றிரவே இஸ்ரேல் சென்று விட்டார்.
 
இதனால் எமானுவல் மக்ரோனுடனான சந்திப்பு இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
 
 

மூலக்கதை