சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மீதான ஊழல் புகார் விசாரணை நவ.16ம் தேதிக்கு ஒத்திவைப்பு

தினகரன்  தினகரன்
சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மீதான ஊழல் புகார் விசாரணை நவ.16ம் தேதிக்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி: சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மீதான ஊழல் புகார் குறித்த விசாரணை அறிக்கையை ஊழல் கண்காணிப்பு ஆணையம் தாக்கல் செய்த நிலையில், விசாரணையை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளது. சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இடையிலான அதிகார போட்டி தீவிரமடைந்த நிலையில், இருவர் மீதும் பரஸ்பரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த விஷயத்தில் தலையிட்ட மத்திய அரசு அவர்களை கட்டாய விடுப்பில் அனுப்பியதோடு இடைக்கால சிபிஐ இயக்குனராக நாகேஸ்வரராவை நியமித்தது. இதனை தொடர்ந்து, தனது அதிகாரம் பறிக்கப்பட்டதை எதிரித்து அலோக் வர்மா தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே பட்நாயக் மேற்பார்வையில் ஊழல் கண்காணிப்பு ஆணையம் விசாரணை நடத்தி அதன் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் ஆகியோர் கொண்ட அமர்வு முன் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான விசாரணை அனைத்தும் 10-ம் தேதி முடிந்துவிட்டது என்று கூறினார். நேற்று காலை 11.30 மணி வரையே காலஅவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், ஒரு மணி நேரம் தாமதமாக வந்ததாக குறிப்பிட்டார். இதனை ஏற்காத தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உச்சநீதிமன்ற அலுவலகம் நேற்று காலை 11.30 மணி வரை திறந்திருந்ததாகவும், காலதாமதமாக வருவது குறித்து ஏன் தகவல் அளிக்கவில்லை? எனவும் கேள்வி எழுப்பினார். அதே நேரத்தில் அலோக் வர்மா மீது விசாரணை நடத்துவதற்கான உத்தரவை அதிகாலை 2.30 மணிக்கு பிறப்பித்த ஊழல் கண்காணிப்பு அலுவலகம், உச்ச நீதிமன்றத்தில் மட்டும் காலதாமதமாக அறிக்கை தாக்கல் செய்ததாக தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குற்றம் சாட்டினார். இதைத்தொடர்ந்து அலோக் வர்மா மீதான விசாரணை அறிக்கையை சீலிட்ட கவரில் துஷார் மேத்தா தாக்கல் செய்தார். அதேபோல தான் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையையும் இடைக்கால சிபிஐ இயக்குனர் நாகேஸ்வரராவும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதனை அடுத்து வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமைக்கு அதாவது நவம்பர் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தது.புதுடெல்லி: சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மீதான ஊழல் புகார் குறித்த விசாரணை அறிக்கையை ஊழல் கண்காணிப்பு ஆணையம் தாக்கல் செய்த நிலையில், விசாரணையை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளது. சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இடையிலான அதிகார போட்டி தீவிரமடைந்த நிலையில், இருவர் மீதும் பரஸ்பரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த விஷயத்தில் தலையிட்ட மத்திய அரசு அவர்களை கட்டாய விடுப்பில் அனுப்பியதோடு இடைக்கால சிபிஐ இயக்குனராக நாகேஸ்வரராவை நியமித்தது. இதனை தொடர்ந்து, தனது அதிகாரம் பறிக்கப்பட்டதை எதிரித்து அலோக் வர்மா தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே பட்நாயக் மேற்பார்வையில் ஊழல் கண்காணிப்பு ஆணையம் விசாரணை நடத்தி அதன் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் ஆகியோர் கொண்ட அமர்வு முன் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான விசாரணை அனைத்தும் 10-ம் தேதி முடிந்துவிட்டது என்று கூறினார். நேற்று காலை 11.30 மணி வரையே காலஅவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், ஒரு மணி நேரம் தாமதமாக வந்ததாக குறிப்பிட்டார். இதனை ஏற்காத தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உச்சநீதிமன்ற அலுவலகம் நேற்று காலை 11.30 மணி வரை திறந்திருந்ததாகவும், காலதாமதமாக வருவது குறித்து ஏன் தகவல் அளிக்கவில்லை? எனவும் கேள்வி எழுப்பினார். அதே நேரத்தில் அலோக் வர்மா மீது விசாரணை நடத்துவதற்கான உத்தரவை அதிகாலை 2.30 மணிக்கு பிறப்பித்த ஊழல் கண்காணிப்பு அலுவலகம், உச்ச நீதிமன்றத்தில் மட்டும் காலதாமதமாக அறிக்கை தாக்கல் செய்ததாக தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குற்றம் சாட்டினார். இதைத்தொடர்ந்து அலோக் வர்மா மீதான விசாரணை அறிக்கையை சீலிட்ட கவரில் துஷார் மேத்தா தாக்கல் செய்தார். அதேபோல தான் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையையும் இடைக்கால சிபிஐ இயக்குனர் நாகேஸ்வரராவும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதனை அடுத்து வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமைக்கு அதாவது நவம்பர் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

மூலக்கதை