அமெரிக்கரிவிலிருந்து ஐரோப்பாவைக் காப்பாற்ற புதிய இராணுவம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
அமெரிக்கரிவிலிருந்து ஐரோப்பாவைக் காப்பாற்ற புதிய இராணுவம்!!

"என்றுமில்லாதவாறான ஒற்றுமையுடன், இறுக்கமான ஒத்துழைப்புடன், எல்லாவற்றிற்கும் மேலாக அமைதிக்காகப் போராடுவோம்" என முதலாம் உலகப் போரின் நூற்றாண்டு நிகழ்வில் அங்கு கூடியிருந்த 70 நாடுகளின் தலைவர்கள் முன், எமானுவல் மக்ரோன் உரையாற்றியிருந்தார்.
 
 
"கடந்த நான்கு ஆண்டுகளில் ஐரோப்பா, தற்கொலை மட்டும் தான் செய்து கொள்ளவில்லை, அதற்கும் மேலான பிரச்சினைகளசை; சந்தித்துள்ளது" என, டொனால்ட் ட்ரம்ப், விளாதிமிர் புட்டின், அஞ்சலா மேர்க்கல், தாயிப் எர்தோகான் போன்ற 70 தலைவர்கள் கூடியிருந்த நிலையில், எமானுவல் மக்ரோன் கூறினார்.
 
 
மேலும் "அமெரிக்காவிலிருந்தும், ரஸ்யாவிடம் இருந்தும், சீனாவிடமிருந்தும் ஐரோப்பாவினைக் காப்பாற்ற புதிய இராணுவத்தினைக் கட்டியெழுப்புவோம்" என மக்ரோன் தெரிவித்துள்ளமை மக்ரோனிற்கும் டொனால்ட் ட்ரம்பிற்கும் இடையில் மேலும் விரிசலை உருவாக்கி உள்ளது.
 
ஐரோப்பாவின் பிரதான எதிரிப் பட்டியலில் அமெரிக்காவும் இணைந்துள்ளமை அரசியல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 

மூலக்கதை