அயோத்தியில் இறைச்சி, மது விற்பனைக்கு தடை : முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு

தினகரன்  தினகரன்
அயோத்தியில் இறைச்சி, மது விற்பனைக்கு தடை : முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு

உத்தரப்பிரதேசம் : பாஜகவினரால் புனித பூமி என்று அழைக்கப்படும் அயோத்தி மாவட்டம் முழுவதும் இறைச்சி, மதுவுக்கு தடை விதித்து உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் பைசாபாத் மாவட்டம் அயோத்தி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அம்மாவட்டம் முழுவதும் இறைச்சி, மது போன்றவற்றை விற்பனை செய்ய தடை விதித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தடை உத்தரவு மாவட்டம் முழுவதற்கும் பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் அயோத்தியில் மருத்துவக் கல்லூரி, விமான நிலையம் உள்ளிட்டவையும் அமைத்து தரப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார். அயோத்தியில் சுமார் 250க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் உள்ளன. இந்நிலையில் இறைச்சி விற்க தடை விதித்துள்ளதால், இதனை நம்பி உள்ளவர்கள் வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசின் இந்த முடிவு தவறானது மற்றும் நியாயமற்றது என்றும் வியாபாரிகள் கூறியுள்ளனர். மேலும் மது, இறைச்சி விற்பனையில் வேலை செய்பவர்களுக்கு அரசு ஏதேனும் ஒரு வேலையை வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூலக்கதை