முதலாம் உலகப்போரில் கொல்லப்பட்ட பரிஸ் மக்கள்! - முதல் நினைவுத்தூபியை திறந்துவைத்தார் ஆன் இதால்கோ!!

PARIS TAMIL  PARIS TAMIL
முதலாம் உலகப்போரில் கொல்லப்பட்ட பரிஸ் மக்கள்!  முதல் நினைவுத்தூபியை திறந்துவைத்தார் ஆன் இதால்கோ!!

நேற்று ஞாயிற்றுக்கிழமை, பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ, முதலாம் உலகப்போரில் கொல்லப்பட்ட பரிஸ் மக்களுக்கான நினைவுத் தூபியை திறந்து வைத்தார். 
 
 
 
நேற்றைய தினம், போர் நிறுத்த ஒப்பந்தை கைச்சாத்திடப்பட்டு நூறு ஆண்டுகள் ஆன நிலையில், முதலாம் உலகப்போரில் கொல்லப்பட்ட மக்களுக்கான முதல் நினைவு தூபியை ஆன் இதால்கோ திறந்து வைத்தார். 285 மீட்டர்கள் நீளமும், 1.30 மீட்டர்கள் உயரமும் கொண்ட இந்த நினைவுத்தூபியில் மொத்தம் 94.415 பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. 
 
பரிஸ், 20 ஆம் வட்டாரத்தில் உள்ள Père-Lachaise கல்லறையின் வெளிப்பக்க சுவற்றில் இந்த தூபி அமைக்கப்பட்டுள்ளது. 1914 இல் இருந்து 1920 ஆகிய வருடங்களுக்குள் உயிர்நீத்தவர்களின் பெயர்கள் 'அகர வரிசையில்' ஆண்டு பிரகாரம் பொறிக்கப்பட்டுள்ளதாக ஆன் இதால்கோ குறிப்பிட்டார்.

மூலக்கதை