கேரளாவில் நடைபெற்ற நேரு கோப்பைக்கான படகுப் போட்டி: 81 படகுகள் பங்கேற்பு

தினகரன்  தினகரன்
கேரளாவில் நடைபெற்ற நேரு கோப்பைக்கான படகுப் போட்டி: 81 படகுகள் பங்கேற்பு

கேரளா: கேரள மாநிலம் ஆலப்புழாவில்  நேரு கோப்பைக்கான படகுப் போட்டியில் 81 படகுகளில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். கேரள மாநிலம் ஆலப்புழாவில் 13 நூற்றாண்டில் இருந்தே படகு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. 1952 ஆம் ஆண்டு முதல் நேரு கோப்பைக்கான படகுப் போட்டி என்ற பெயரில் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் இந்த போட்டியில் ஏராளமான மக்கள் கலந்துக்கொள்வர். இதை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருவது வழக்கம். வழக்கமாக ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்படும் இந்த போட்டி  வெள்ளப் பேரழிவால் தள்ளி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் தொடங்கியது. புன்னைமடை ஏரியில் தொடங்கப்பட்ட இந்த ஏரியில் 2 நாட்களில் 81 படகுகள் பங்கேற்றன. ஒவ்வொரு படகிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருந்துக் கொண்டு துடுப்புகளை அசைத்து படகுகளை விரைவாக செலுத்தினர். இந்த போட்டியை உள்ளூர் மக்களும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் கண்டுக்களித்தனர்.

மூலக்கதை