கொட்டும் மழைக்குள் அமெரிக்க வீரர்களின் கல்லறைக்குச் சென்று அஞ்சலி செலுத்திய ட்ரம்ப்!!

PARIS TAMIL  PARIS TAMIL
கொட்டும் மழைக்குள் அமெரிக்க வீரர்களின் கல்லறைக்குச் சென்று அஞ்சலி செலுத்திய ட்ரம்ப்!!

சனிக்கிழமை இரத்துச் செய்திருந்த இந்த அஞ்சலி நிகழ்வை, நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டிருந்தார் டொனால்ட் ட்ரம்ப். 
 
சனிக்கிழமை நவம்பர் 10 ஆம் திகதி பரிசுக்கு வந்திறங்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மெலேனியா ட்ரம்ப் ஆகிய தம்பதியினர், எலிசேயில் மக்ரோன் தம்பதியினருடன் சந்திப்பை நிகழ்த்தியதன் பின்னர் அவருக்கு  Suresnes (Hauts-de-Seine) கல்லறைக்குச் செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த பயணத்தை ட்ரம்ப் திடீரென இரத்துச் செய்தார். மோசமான காலநிலை காரணமாக இந்த பயணம் இரத்துச் செய்யப்படுவதாக வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை சோம்ப்ஸ்-எலிசே நிகழ்வுகள் அனைத்தும் முடிவடைந்தததும், ட்ரம்ப், அமெரிக்க வீரர்களின் கல்லறையான  Suresnes கல்லறைக்கு (Hauts-de-Seine) பயணமானார். அங்கு குடை ஒன்றை பிடித்துக்கொண்டு அமெரிக்க வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்த கல்லறையில் முதலாம் உலகப்போரில் உயிரிழந்த 1,541 அமெரிக்க வீரர்களின் சடலங்களும், இரண்டாம் உலகப்போரில் உயிரிழந்த பெயர் தெரியாத 24 வீரர்களின் சடலங்களும் புதைக்கப்பட்டுள்ளன. 

மூலக்கதை