நக்சல்கள் அச்சுறுத்ததால் தற்காப்பிற்காக வில் அம்புவுடன் பள்ளிக்கு செல்லும் சிறார்

தினகரன்  தினகரன்
நக்சல்கள் அச்சுறுத்ததால் தற்காப்பிற்காக வில் அம்புவுடன் பள்ளிக்கு செல்லும் சிறார்

ராஞ்சி : ஜார்கண்டில் நக்சலைட்டுகள் தாக்குதல்களில் இருந்து தப்ப மாணவர்கள் தற்காப்பு ஆயுதங்களை எடுத்துச் செல்கின்றனர். ஜார்கண்ட் மாநிலம் சிங்கம்பூம் மாவட்டத்தில்  நக்சலைட்டுகள் அடக்குமுறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக சகுலியா போச்சபாணி கிராமத்தில் பிள்ளைகள் அரசுப் பள்ளி செல்வதை நக்சலைட்டுகள் எதிர்த்து வருகின்றனர். பள்ளிகளை வெடிகுண்டு வைத்து தகர்ப்பது, இடிப்பது போன்ற நாச வேலைகளிலும்   நக்சலைட்டுகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கிராம குழந்தைகள் பள்ளிக்கு செல்வது என்றால் வனப்பகுதியை தாண்டியே செல்ல வேண்டும் வனப்பகுதியில் நக்சலைட்டுகள் அச்சுறுத்தல் அதிகமாகவே இருக்கின்றன. ஆனால் பள்ளி படிப்பில் ஆர்வம் கொண்டுள்ள மாணவர்கள் தற்காப்புக்காக வில் - அம்புவுடன் பள்ளிக்கு செல்கின்றனர். தங்களின் அடுத்த தலைமுறையாவது பள்ளி படிப்பை தொடர வேண்டும் என்பதால் சகுலியா போச்சபாணி கிராமத்து முதியவர்கள் வில் அம்பை தயாரித்து தருகிறார்கள். இதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற நுணுக்கங்களை பள்ளி சிறார்களுக்கு முதியவர்கள் வழங்குகின்றனர். இளம் கன்று பயம் அறியாது என்பது போல் நக்சலைட்டுகள் அச்சுறுத்தல் கொண்ட கிராமத்தில் பள்ளி செல்லும் சிறார்கள் வில் அம்புவுடன் தற்காத்து கொள்கிறார்கள்.

மூலக்கதை