மது அருந்தி வந்த விமானியின் உரிமத்தை 3 ஆண்டுக்காலத்துக்கு நீக்கியது ஏர் இந்தியா

தினகரன்  தினகரன்

டெல்லி : டெல்லியில் இருந்து லண்டனுக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தை குடிபோதையில் இயக்கவிருந்த விமானி தடுத்து நிறுத்தப்பட்டார். நேற்று டெல்லியில் இருந்து லண்டன் செல்லும் ஏர் இந்தியா 111 என்ற விமானம் 200 பயணிகளுடன் பிற்பகல் இரண்டே முக்கால் மணிக்கு புறப்பட இருந்தது. இந்த விமானத்தை இயக்கும் 56 வயதான விமானி அரவிந்த் கத்பாலியாவிற்கு மது அருந்தி இருக்கிறாரா என்கிற சோதனை நடத்தப்பட்டது. இதில் அவர் மது அருந்தி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இருமுறை நடத்தப்பட்ட மது அருந்தியதை கண்டறியும் சோதனையில் விமானி அரவிந்த் கத்பாலியா மது அருந்தியது உறுதியானது. அதனைத் தொடர்ந்து அவர் விமானத்தை இயக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் லண்டனுக்கு புறப்படும் விமானம் தாமதமானது. ஏர் இந்தியா விமானி அரவிந்த் கத்பாலியா இது போன்ற புகாரில் சிக்குவது முதல்முறை அல்ல. ஏற்கனவே குடிபோதையில் விமானத்தை இயக்க முயன்ற புகாரில் இவர் கடந்த ஆண்டு 3 மாதங்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து ஏர் இந்தியா விமான இயக்கப் பிரிவில் இயக்குநராகப் பணியாற்றும் அரவிந்த் கத்பாலியா பணிக்கு மது அருந்தி வந்தது 4மாதக் காலத்துக்குள் இது இரண்டாவது முறையாகும். முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் இவர் இத்தகைய புகாரில் சிக்கினார். இதையடுத்து தொடர் குற்றச்சாட்டுகள் விளைவாக விமானி உரிமத்தை 3 ஆண்டுக்காலத்துக்கு நீக்கி ஏர் இந்தியா நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை