திருநங்கைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தண்டனைக்குரியது என உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு

தினகரன்  தினகரன்
திருநங்கைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தண்டனைக்குரியது என உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி : திருநங்கைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தண்டனைக்குரியது என உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருநங்கைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை குற்றமாக கருதக்கோரி திருநங்கைகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்திய தண்டனியல் சட்டப்பிரிவு எண் 375ஐ பொதுவானதாக மாற்றக் கோரிக்கை விடுத்திருந்தனர். தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த பொதுநல வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் தலையிட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. சட்டப்பிரிவு எண் 375ன் படி பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குற்றவியல் தண்டனையாக கருதப்பட்டு தண்டனை வழங்கும் நடைமுறை அமலில் உள்ளது. இதையடுத்து நாடாளுமன்றத்தால் மட்டுமே சட்டப்பிரிவு எண் 375ஐ மாற்ற முடியும் என்றும், புதிய சட்டத்தை உருவாக்கவோ, ஏற்கனவே இருக்கும் சட்டத்தை மாற்றவோ உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. தேவைப்பட்டால் நாடாளுமன்றம் மட்டுமே இந்த சட்டத்தில் மாற்றம் கொண்டு வர இயலும் என கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை