வரி வசூலில் பின்தங்கும் மாநகராட்சி வாரம் 2 நாள் முகாம் நடத்த உத்தரவு

தினமலர்  தினமலர்
வரி வசூலில் பின்தங்கும் மாநகராட்சி வாரம் 2 நாள் முகாம் நடத்த உத்தரவு

மதுரை:மதுரை நகரில் வணிகம், தொழில் நிறுவனங்கள் வரி செலுத்துவதில் பின்தங்கியுள்ளதால் வாரம் 2 நாட்கள் இரவு 7:00 மணி வரை முகாம் அமைத்து வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி 300க்கும் அதிகமான லாட்ஜ்கள், 10 ஆயிரம் கடைகள் உள்ளன. பல நிறுவனங்கள் வரி செலுத்தாமல் இழுத்தடிக்கின்றன. இதனால் மாநகராட்சி எதிர்பார்த்த வருவாயை எட்டவில்லை. கடந்த வாரம் நகரில் நடக்கும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங் ஆய்வு செய்தார். வரி வசூலை அதிகப்படுத்த உத்தரவிட்டார்.இதன்படி ஜான்சிராணி பூங்கா வரி வசூல் மையத்தில் செவ்வாய், வெள்ளியில் கூடுதலாக மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை தொழில் வரி மட்டும் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வாரம் முதல் நடைமுறைக்கு வருகிறது.மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ''இந்த வாய்ப்பு மண்டலம் 4 ல் ஒரே ஒரு மையத்தில் அளிக்கப்பட்டுள்ளது. இதனை நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்,'' என்றனர்.

மூலக்கதை