உ.பி., அயோத்தி மாவட்டத்தில் இறைச்சி மது, விற்பனைக்கு தடை

தினமலர்  தினமலர்
உ.பி., அயோத்தி மாவட்டத்தில் இறைச்சி மது, விற்பனைக்கு தடை

லக்னோ: உ.பி., மாநிலம் அயோத்தி மாவட்டத்தில் மாவட்டம் மழுவதும் இறைச்சி மதுவுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

உ.பி., மாநிலத்தில் பைசாபாத் மாவட்டம் அயோத்தி என பெயர் மாற்றம்செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மாவட்டம் முழுவதும் இறைச்சி, மது போன்றவை விற்பனை செய்ய தடை விதித்து மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கூறுகையில் இந்த தடையால் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு வழி வகுக்கும். புனிதமான அயோத்தியில் இறைச்சி மது விற்கப்பட வில்லை. இந்தத் தடை முழு மாவட்டத்திற்கும் பொருந்தும். . என கூறினார்.தடையை வரவேற்றுள்ளஅனுமன் கோவிலை சேர்ந்த தர்மதாஸ் பக்ஷ்கர் நாடு முழுவதும் இறைச்சி விற்பனையை தடை செய்ய வேண்டும் என கூறி உள்ளார்.
தடையை வரவேற்றுள்ள மதுபான கடை உரிமையாளர் சுஷில் ஜெய்ஸ்வால் கூறுகையில் பணம் சம்பாதிக்க வேற ஏதேனும் ஒன்றை மக்கள் கண்டு பிடிப்பார்கள் என்றார்.
அதே நேரத்தில் அயோத்தி மாவட்டத்தில் இறைச்சி கடை நடத்தி வரும் முகம்மது ஷாசாத் கூறுகையில் மாவட்டத்தில சுமார் 250க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் உள்ளது. இதற்கு தடை செய்யப்பட்டால் இதனை நம்பி உள்ளவர்கள் வேலை வாய்ப்பை இழப்பார்கள். அரசு எங்களுக்கு ஒரு வேலையை வழங்க வேண்டும். அரசின் இந்த முடிவு தவறானது மற்றும் நியாயமற்றது என கூறி உள்ளார்.

மூலக்கதை