உளவுத்துறைக்கு அதிகரிக்கும் உச்சக்கட்டப் பணம் - பயங்கரவாதம் தடுக்கப்படுமா?

PARIS TAMIL  PARIS TAMIL
உளவுத்துறைக்கு அதிகரிக்கும் உச்சக்கட்டப் பணம்  பயங்கரவாதம் தடுக்கப்படுமா?

பிரான்சின் உள்ளக உளவு மற்றும் பாதகாப்புத்துறையான DGSI (Direction générale de la sécurité intérieure ) இற்கான செலவீனப் பாதீட்டில், மேலதிகமாக 20 மில்லியன் யூரோக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணத்தின் மூலம், பயங்கரவாதத் தடைப்பிரிவு பெரிதும் பலப்படுத்தப்பட உள்ளது எனவும், பிரான்சின் உள்துறை அமைச்சர் கிறிஸ்தோப் கஸ்தனேயின் (Christophe Castaner) உள்துறை அமைச்சின், இராஜாங்கச் செயலாளர் லொரோன் நூனெஸ் (Laurent Nunez) ஊடகங்களிற்குத் தெரிவித்துள்ளார்.
 
 
புதிதாக இணைக்கப்படும் பத்தாயிரம் காவற்துறையினரில், 1900 பேர், உளவுத்துறையில் இணைக்கப்படுவார்கள் என்றும், இதன் மூலம் பயங்கரவாதத் தாக்குதல்கள் பெரிதும் தடுக்கப்படும் என்றும் தெரிவித்த உள்துறை அமைச்சின் இராஜாங்கச் செயலாளர், «0 சதவீத ஆபத்தின்மை» (Le risque zéro) என்பது சாத்தியமற்றது எனத் தெரிவித்தார்.
 
 
இருப்பினும் «0 சதவீத ஆபத்தின்மை» நிலையை எட்டுவதற்காக, பயங்கரவாதத் தடைப்பிரிவையும், பிரான்சின் உள்ளக மற்றும் வெளியக உளவு மற்றும் பாதுகாப்புத்துறையையும் மிகுந்த பலமுள்ளதாக மாற்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.
 

மூலக்கதை