தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்களுக்கு போட்டியாக சீனா அறிமுகப்படுத்திய ரோபோ!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்களுக்கு போட்டியாக உலகில் முதன்முறையாக ரோபோ செய்தி வாசிப்பாளரை சீனா அறிமுகப்படுத்தி உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது. 

செயற்கை நுண்ணறிவு மூலம் ஆங்கிலத்தில் சரலமாக செய்தி வாசிக்கும் இந்த ரோபோவை சீனாவின் சின்ஹுவா செய்தி ஏஜென்சி அறிமுகம் செய்து உள்ளது. ‘ஹி’ எனப்படும் அந்த உயிரில்லாத செய்தி வாசிப்பாளர், ஆணின் முக அமைப்புடனும் குரலுடனும் காணப்படுகிறார். செய்தி தொடங்கியதும் பார்வையாளர்களை பார்த்து புன்முறுவலோடு செய்தி வாசிக்க தொடங்குகிறது இந்த ரோபோ.

 சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள இந்த ரோபோ செய்தி வாசிப்பாளரை ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பு ரோபோவான இதனை சௌக் மற்றும் சுன்சுவா செய்தி நிறுவனங்கள் இணைந்து உருவாக்கி உள்ளன.

சீனாவின் ஹூசௌன் நகரில் நடைபெற்ற இணையதள கான்ஃபரன்சில் இந்த ரோபோ செய்தி வாசிப்பாளர் தனது திறமையை காட்டி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இதன் குரல் வளம் பாவனை ஆகியவை உண்மையான செய்தி வாசிப்பாளரை பார்த்து உருவாக்கப்பட்டு உள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும், பின்னணியில் வெளியாகும் வீடியோ காட்சிகளை உள்வாங்கி, அதற்கேற்ப உயிருள்ள நபர்களைப் போலவே குரலில் ஏற்ற இறக்கத்துடனும், முகபாவத்துடனும் தேவைப்படும் நேரங்களில் அளவான கண்ணசைவுகளுடனும் செய்தி வாசிக்கும் இந்த ‘ஹி’யால் ஒருநாளின் 24 மணி நேரமும் ஆண்டின் அனைத்து நாட்களிலும் சோர்வின்றி செய்தி வாசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை