இந்தோனாசியாவில் உள்ள "சுரபயா" வில் வாழும் தமிழர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் முனைவர் விஸ்வநாதன் அவர்கள் கலந்துக் கொண்டு உரையாடினார்...

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
இந்தோனாசியாவில் உள்ள சுரபயா வில் வாழும் தமிழர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் முனைவர் விஸ்வநாதன் அவர்கள் கலந்துக் கொண்டு உரையாடினார்...

வி ஐ டி பல்கலைக் கழக வேந்தரும், தமிழர் முன்னேற்றத்திற்காக கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி சென்னையில் உருவாகிய "தமிழியக்கம்" அமைப்பின் தலைவருமான, மூத்த கல்வியாளர் முனைவர் விஸ்வநாதன் அவர்கள், இந்தோனாசியாவின் இரண்டாவது பெரிய நகரமான "சுரபயா" வில் வாழும் தமிழர்கள் ஏற்பாடு செய்த நிகழ்டசியில்  கலந்துகொண்டு உரையாடினார்.

சுமார் 17000 தீவுகளையும், 150 எரிமலைகளையும் கொண்ட நாடு இந்தோனாசியா. சுனாமி, பூகம்பம் போன்ற பல இயற்கை சீற்றங்களை அடிக்கடி எதிர்கொள்ளும் நாடும் இந்தோனேசியாதான்.

சீனா, இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்து மிக  அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இது.

நேற்றய தினம், நவம்பர் 7 ஆம் தேதி "சுரபயா" நகரில் உள்ள "சித்தாரா" உணவத்தில் நடைபெற்ற கலந்துரயாடல் நிகழ்சியில் 30 க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்டார்கள்.

ஆசியத் தமிழ்ச்சங்க தலைவர் இந்தோனேசியா விசாகன் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.  சுரபயா வாழ் மூத்த தமிழர் திரு கிருஷ்ண மூர்த்தி அவர்கள் முனைவர் விஸ்வநாதனுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார்.

இதில் உரையாற்றிய முனைவர் விஸ்வநாதன்,  வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் அவர்கள் பிள்ளைகளுக்கு தமிழர் மரபுகள், தொன்மை, செழிப்பான தமிழர் வரலாறு, கலை, இலக்கியம் , பண்பாடு ஆகியவற்றை கற்றுக்கொடுத்து, தமிழினத்தின் பெருமைகளை உணர்த்த வேண்டும் என்று கூறினார்.

முக்கியமாக, வெளிநாடு வாழ் தமிழர்கள், தமிழ் எழுத, படிக்க, பேச கூட முடியாத நிலமை பல நாடுகளில் உள்ளது, இதை மாற்ற வேண்டும்,  இதற்கான முயற்சிகளை கண்டிப்பாக "தமிழியக்கம்" எடுக்கும் என உறுதியளித்தார்.

மேலும், பல நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களின் கல்வித்தரம் இன்றும் ஒரு கேள்விக்குறி யாகத்தான் இருந்து வருகிறது. அவர்களின் கல்வித்தரத்தை உயர்தினால் மட்டுமே, நமது தமிழ்ச் சமுதாயம்,  பொருளாதார த்தில் உயர்ந்த சமுதாயமாகவும் சாதனைப் படைக்கும் சமுதாயமாகவும்வளரமுடியும்,  ஆகவே, வி ஐ டி பல்கலைக்கழகம் அதற்கான அனைத்து முயற்சிகளிலும் வெளிநாட்டு தமிழர்களுக்கு உறுதுணை யாக இறுக்கும்.

வருடந்தோறும்  5 முதல் 10 தமிழ் வம்சாவளி இந்தோனேசிய மாணவர்களுக்கு  இலவச சேர்க்கை மற்றும் இலவச  கல்விக் கட்டணம் வழங்கும் என்று உறுதியளித்தார்.

"சுரபாயா தமிழ்ச்சங்கம்" என்ற தமிழ் அமைப்பை துவக்கி வைத்து பேசுகையில் விரைவில் ஒரு பிரமாண்டமான தமிழ் நிகழ்ச்சியில் மீண்டும் சந்திப்போம் என உறுதியளித்தார்..

மூலக்கதை