டொனால்ட் ட்ரம்பின் முன்னால் மார்பு திறந்த பெண்கள் - போராட்டம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
டொனால்ட் ட்ரம்பின் முன்னால் மார்பு திறந்த பெண்கள்  போராட்டம்!!

இன்று முதலாம் உலகப்போர் வெற்றி நூற்றாண்டு நாளில், 7 இற்கும் மேற்பட்ட தலைவர்களை, எமானுவல் மக்ரோன் பிரான்சிற்கு அழைத்துள்ளமை வாசகர்கள் அறிந்ததே.
 
இன்று அந்த நிகழ்விற்காகப் பிரத்தியேகப் பாதுகாப்புடன் சென்ற அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம்பின் வாகனத் தொடரணி, மார்பு திறந்த பெண்ணிப் போராளிகளான Femen போராளிகள் இருவரால் தடுத்து நிறுத்தப்பட்டது. ட்ரம்பிற்கு எதிரான வாசகங்கள் இந்த இரண்டு போராளிகளின் மார்புகளில் எழுதப்பட்டு இருந்தது.
 
 
இவர்களில் ஒரு பெண், ஜோந்தார்மினரால் தடுக்கப்பட் மற்றையபெண் சோம்ப்ஸ் எலிசே வீதி நீளத்திற்கு ஓட முயல, அவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
 
நேற்று மேலும் மூன்று Femen போராளிகள், இன்று வந்திருக்கும் தலைவர்களில் 'போர்க்குற்றவாளி' ஒருவர் இருப்பதாக மார்பில் எழுதியபடி, Arc-de-Triomphe கீழ் போராட்டம் நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.
 

மூலக்கதை