ஒப்புதல்!

தினமலர்  தினமலர்

கலெக்டர் அலுவலகம் அருகே பஸ் நிலையம் அமைக்க...வேளாண் பல்கலைக்கழகம் 25 ஏக்கர் வழங்க அனுமதி-கடலுார்:கடலுார் ஆல்பேட்டை அருகே புதிய கலெக்டர் அலுவலகம் அருகே 25 ஏக்கர் பரப்பளவில் நகர பஸ் நிலையம் அமைக்க வேளாண் பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு ஒப்புதல் அளித்துள்ளது.கடலுார் நகரத்தில் போக்குவரத்து நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பழைய கலெக்டர் அலுவலகத்தில் கடுமையான இட பற்றாக்குறை இருந்து வந்தது. கடலுார் நகரம் குறுகி இருப்பதால் அதை விரிவடைய செய்யும்பொருட்டு ஆல்பேட்டை அருகே கரும்பு ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டது.அப்பகுதியில் மரங்கள், போக்குவரத்து, கடைகள், என எதுவுமே இல்லாததால் அலுவலகம் பொட்ட வெளிக்காடாக வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் மாவட்டத்தின் கடைகோடியில் உள்ள திட்டக்குடி, விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இருந்து கலெக்டரை சந்தித்து நேரடியாக மனு கொடுக்க விரும்புபவர்கள் போக்குவரத்து வசதியின்றி அவதிப்பட்டனர்.அதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான இந்த இடத்தில் கரும்பு ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகிறது. இதே வளாகத்தில் பஸ் நிலையம் அமைந்தால் தான் கலெக்டர் அலுவலகம் வந்து செல்ல வசதியாக இருக்கும் என பொது மக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.அதனையேற்று கடலுார் நகர்மன்றக் கூட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே பஸ் நிலையத்தை கலெக்டர் அலுவலகம் அருகே மாற்றி அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி கரும்பு ஆராய்ச்சி பண்ணைக்கு சொந்தமான இடத்தில் நகர பஸ் நிலையம் மற்றும் ஐ.டி., பார்க் அமைக்க வேளாண் பல்கலைக் கழகத்திற்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டன. இந்த முன்மொழிவுகள் மீது தற்போது நடவடிக்கை எடுத்து வேளாண் பல்கலைக்கழகம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நகர பஸ் நிலையம் அமைக்கவும், அதைத்தொடர்ந்து 10 ஏக்கர் பரப்பளவில் ஐ.டி., பார்க் அமைக்கவும் மொத்தம் 25 ஏக்கரை வழங்க வேளாண் பல்லைக்கழக ஆட்சி மன்ற குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.நிலம் கொடுத்த வேளாண் பல்கலைக்கழகத்திற்கு ஈடாக வேறு இடத்தில் இருந்து 25 ஏக்கரை அரசு திருப்பி வேளாண் பல்கழகத்திடம் வழங்கப்பட வேண்டும். வருவாய்த்துறை சார்பில் அதற்கான முதற்கட்ட முயற்சிகள் நடந்து வருகிறது. இதையடுத்து, நகராட்சி சார்பில் முயற்சி மேற்கொண்டு பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகி வருகிறது.

மூலக்கதை