பென்­ஷன் சேவை­யில் முன்­னணி நாடு­கள்

தினமலர்  தினமலர்
பென்­ஷன் சேவை­யில் முன்­னணி நாடு­கள்

முதி­ய­வர்­க­ளுக்­கான பென்­ஷன் சேவை அளிப்­ப­தில் நெதர்­லாந்து மற்­றும் டென்­மார்க் ஆகிய நாடு­கள் முன்­னிலை வகிப்­ப­தாக சர்­வ­தேச ஆய்வு தெரி­வித்­துள்­ளது.

சர்­வ­தேச ஆலோ­சனை நிறு­வ­ன­மான மெர்­சர், பென்­ஷன் திட்­டங்­கள் தொடர்­பான மெல்­பர்ன் மெர்­சர் குளோபல் பென்­ஷன் இண்­டக்ஸ் பட்­டி­யலை வெளி­யிட்­டுள்­ளது. 34 நாடு­களில் பென்­ஷன் திட்­டங்­கள் அலசி ஆரா­யப்­பட்டு இந்த பட்­டி­யல் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

பென்­ஷன் திட்­டங்­கள், போது­மான தன்மை, நீடித்த தன்மை மற்­றும் நம்­ப­கத்­தன்மை ஆகிய அம்­சங்­களில் மதிப்­பி­டப்­பட்­டுள்­ளன. இந்த பட்­டி­ய­லில் நெதர்­லாந்து, டென்­மார்க் முத­லி­டம் பெற்­றுள்­ளன. இந்­தியா, சீனா, ஜப்­பான், மெக்­சிகோ ஆகிய நாடு­க­ளு­டன் பின் வரி­சை­யில் இடம்­பெற்­றுள்­ளது.

இந்­தி­யா­வில் சிறந்த பென்­ஷன் அமைப்பு இருந்­தா­லும் இதில் குறை­கள் இருப்­ப­தா­க­வும், இவை திருத்­தப்­பட்டு மேம்­ப­டுத்­தப்­பட வேண்­டும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மூலக்கதை