ஒரே நேரத்தில் 3 கியூப்பிற்கு தீர்வு: சீனச் சிறுவன் கின்னஸ் சாதனை!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

சீனாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் ஒரே நேரத்தில் 3 ரூபிக் க்யூப்க்கு தீர்வு கண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளான். 

ரூபிக் க்யூப் என்பது மூளைக்கு வேலை தரக்கூடிய சவாலான ஒரு விளையாட்டு ஆகும். ஞாபகத்திறனை வளர்க்கும் வண்ண வண்ண ரூபிக் க்யூபை சிறுவர்கள் மட்டுமல்லாது பெரியவர்களும் பயன்படுத்தி வருகின்றனர். 

சீனாவின் சியாமென் பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய க்யூ ஜியான்யு என்ற சிறுவன், ஒரே நேரத்தில் 3 ரூபிக் க்யூப்க்கு தீர்வு கண்டு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்து உள்ளான். 

ஒரே நேரத்தில் இடது மற்றும் வலது கைகளில் இரு ரூபிக் க்யூப்களையும் காலில் 1 ரூபிக் க்யூபையும் வைத்து தீர்வு கண்டுள்ளான். ஒரு நிமிடம் மற்றும் 36. 39 வினாடிகளில் காணப்பட்ட இந்த தீர்வு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது.

முன்னதாக இந்த 1 நிமிடம் 6 நொடிகளில் ஒரு ரூபிக் க்யூப்க்கு தீர்வு கண்டு உலக சாதனை படைத்துள்ளான். ஆனால் தற்போது 15.84 நொடிகளில் ஒரு ரூபிக் க்யூப்க்கு தீர்வு கண்டு புதிய கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளான். 

இதற்கிடையில் உலக சாதனை தினம் கடைபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டான்.  இந்த 13 வயது சிறுவன் தனது 6 வயதில் இருந்தே இந்த ரூபிக் க்யூப் விளையாட்டை விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. 

மூலக்கதை