பாலக்காடு- பொள்ளாச்சி இடையே அகல ரயில் பாதையில் 100 கி.மீ. வேகத்தில் சோதனை ஓட்டம்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

பாலக்காடு-பொள்ளாச்சி இடையே உள்ள அகல ரயில் பாதையில் 100 கிமீ வேகத்தில் ரயில் இயக்கி சோதனை ஓட்டம்  நடந்தது.  

பொள்ளாச்சியில் இருந்து பாலக்காட்டிற்கு சுமார் 45 கிலோ மீட்டர் தூரமுள்ள ரயில் பாதை 2016 -ல் அகல பாதையாக மாற்றப்பட்டது. இப்பாதையில் ரயில்கள் அனைத்தும் அதிகபட்சமாக தற்போது 80 கிமீ வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இப்பாதையில் ரயில்களை அதிகபட்சமாக 100 கிமீ வேகத்தில் இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்து உள்ளது. இதற்காக பாலக்காட்டிலிருந்து பொள்ளாச்சி வரை ரயிலை 100 கிமீ வேகத்தில் இயக்கி, சோதனை ஓட்டம் நடந்தது.

 பாலக்காடு ரயில்வே ஸ்டேஷனிலிருந்து  காலை 10.10 மணி அளவில் மூன்று இணைப்பு பெட்டிகளுடன் புறப்பட்ட ரயில் 10.45 மணி அளவில் பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனை வந்தடைந்தது.

சோதனை ஓட்ட ரயிலில், தென்னக ரயில்வே முதன்மை பொறியாளர் மஸ்தான்ராவ், பாலக்காடு கோட்ட முதன்மை பொறியாளர் அனந்தராமன் ஆகியோர் பயணம் செய்தனர். அப்போது அவர்கள் தண்டவாளத்தில் ஏதேனும் அதிர்வு உள்ளதா என்றும், வரும் காலங்களில் 100 கிமீ வேகத்தில் ரயில் இயக்குவதற்கான தண்டவாளத்தின் உறுதித்தன்மை குறித்தும் ஆராய்ந்தனர்.

மூலக்கதை