தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் அதிகரிப்பு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் அதிகரிப்பு!

தமிழகத்தின்  பல்வேறு பகுதிகளில் வைரஸ் காய்ச்சல், டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் அதிகரித்து உள்ளது. 

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது;  

தமிழகம் முழுவதும் 1700 பேர் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டு 3800 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.  இந்த ஆண்டு 1700 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 17 பேர் உயிரிழந்து உள்ளனர்.

காய்ச்சலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நோய் அறிகுறி தெரிந்தால் பொதுமக்கள் அரசு மருத்துவ மனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். 

இந்த நிலையில்  புதுக்கோட்டைமாவட்டம் இலுப்பூரில் இருசக்கர வாகனத்தில் சென்று டெங்கு ஒழிப்பு பணியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.

மூலக்கதை