கஜா புயல்; பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

PARIS TAMIL  PARIS TAMIL
கஜா புயல்; பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்து இன்று அது புயலாக மாறியது.  இதற்கு கஜா என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
 
இந்த புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து 2 அல்லது 3 நாட்களில் தமிழக கடற்கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.  இதன் காரணமாக 14-ந் தேதி மாலையில் இருந்து வட கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். அதன்பிறகு உள்மாவட்டங்களில் மழை இருக்கும்.
 
புயல் கரையை நெருங்கும் போது 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.  எனவே ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் நாளை இரவுக்குள் கரை திரும்ப எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
 
இதேபோன்று ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை உள்ளிட்ட துறைமுகங்களில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது.
 
இந்த நிலையில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதை தொடர்ந்து எண்ணூர் துறைமுகத்திலும் மற்றும் கடலூர், புதுச்சேரி, நாகை, பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களிலும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருந்தது.
 
இந்நிலையில், பாம்பன் துறைமுகத்தில் இன்று மீண்டும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

மூலக்கதை