வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது

PARIS TAMIL  PARIS TAMIL
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது

அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்து இருப்பதாகவும், அது புயலாக மாற இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்து இருந்தது.
 
வங்க கடலில் உருவான இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறியுள்ளது.  இந்த புயலுக்கு கஜா என பெயரிடப்பட்டு உள்ளது.  வனவிலங்குகளில் உருவத்தில் பெரிய விலங்கான யானை என்ற பொருள்படும் வகையில் புயலுக்கு கஜா என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
 
இந்த புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து 2 அல்லது 3 நாட்களில் தமிழக கடற்கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.  12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் புயலானது சென்னையின் தென்கிழக்கே 990 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டு உள்ளது.
 
புயல் கரையை நெருங்கும் போது 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.  எனவே ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் நாளை இரவுக்குள் கரை திரும்ப எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

மூலக்கதை