125 தடவைகள் அதிவேகமாக பயணித்த - உந்துருளி சாரதி ஒருவருக்கு €19,220 தண்டப்பணம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
125 தடவைகள் அதிவேகமாக பயணித்த  உந்துருளி சாரதி ஒருவருக்கு €19,220 தண்டப்பணம்!!

உந்துருளி சாரதி ஒருவர் 125 தடவைகள் அதிவேகமாக சென்றுள்ளதாக குற்றத்துக்காக, அவருக்கு €19,220 க்கள் தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளது. 
 
கடந்த நான்கு மாதங்களாக மேற்கொண்ட கண்காணிப்புக்கு பின்னர், Tarn-et-Garonne  நகர ஜோந்தாமினர்கள் குறித்த சாரதியை கைது செய்துள்ளனர். குறித்த சாரதி கைது செய்யப்பட்டதோடு, 78 தடவைகள் அதிவேகமாக பயணித்துள்ளதாகவும், அவருக்கு €19,220 க்கள் தண்டப்பணமும், ஒருவருடத்துக்கு சாரதி அனுமதி பத்திர இரத்தும் தண்டனையாக வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அதன் பின்னர் தான் அவர் மொத்தமாக 125 தடவைகள் அதிவேகமாக பயணித்துள்ளமை தெரியவந்துள்ளது. 
 
ஜூன் 2017 ஆம் ஆண்டில் இருந்து ஜனவரி 2018 ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் இவர் மொத்தமாக 125 தடவைகள் அதிவேகமாக பயணித்துள்ளார். அத்தனை தடவைகளின் போதும் அவர் உந்துருளியின் இலக்கத்தகடை மறைத்துக்கொண்டு பயணித்துள்ளார்.  இதனால் அவரை கண்டுபிடிக்க ஜோந்தாமினருக்கு நான்கு மாதங்கள் எடுத்துக்கொண்டதாக தெரிவித்துள்ளனர். 
 
 
 

மூலக்கதை