தலைமறைவான ஜெனார்த்தன ரெட்டி போலீசில் சரண்

தினமலர்  தினமலர்
தலைமறைவான ஜெனார்த்தன ரெட்டி போலீசில் சரண்

பெங்களூரு: கர்நாடக மாநிலம், பெல்லாரியைச் சேர்ந்த ஜனார்த்தன் ரெட்டி சுரங்கத் தொழில், இரும்புத்தாது ஏற்றுமதி என பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார்.கர்நாடகாவில் முந்தைய பா.ஜ. ஆட்சியின்போது, சுரங்கங்கள் ஒதுக்கிய விவகாரத்தில் 2015-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகள் சிறையில் இருந்து தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில் ஜனார்த்தன் ரெட்டி அமைச்சராக இருந்த போது நிதி நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் அகமத் ஃபரீத் என்பவரை காப்பாற்ற ஜனார்த்தன ரெட்டி ரூ/18 கோடி லஞ்சம் கேட்டதாக புகார் கூறப்பட்டது. அமலாக்கத்துறையில் பதிவான வழக்கை சுமுகமாக முடித்து கொடுக்க ரூ.18 கோடி பேரம் பேசி 57 கிலோ தங்க கட்டிகள் வாங்கிய சம்பவத்தில் ஜனார்த்தனரெட்டி தலைமறைவாகிவிட்டார். அவரை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மத்திய குற்றப்பிரிவின் முன் விசாரணைக்கு ஆஜராக இருப்பதாகவும் தெரிவித்திருந்த ஜனார்த்தன ரெட்டி மாலையில் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார்.

மூலக்கதை