ஸ்மார்ட்போன் பிரின்டர்

தினமலர்  தினமலர்
ஸ்மார்ட்போன் பிரின்டர்

புஜி பிலிம் இந்தியா நிறுவனம், அண்மையில் புதிய ஸ்மார்ட்போன் பிரின்டர் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.இன்ஸ்டாக்ஸ் ஷேர் ஸ்மார்ட்போன் பிரின்டர் எஸ்.பி.,2 எனும் இந்த பிரின்டர் மூலமாக, 320டிபிஐ ரெசொலுஷனில், 62x46 மி.மீட்டர் சைஸில் படத்தை பிரின்ட் எடுக்கலாம். இமேஜை உட்செலுத்துவதற்கும் பிரின்ட் எடுப்பதற்கும் இடையே, 10 நொடிகள் தேவைப்படுகிறது. ஒரு செட்டில், 100 பிரின்ட் எடுக்கலாம்.பேட்டரி, பிலிம் பேக் இல்லாமல், இதன் எடை, 250 கிராம். எடுத்த படத்தை இன்ஸ்டாக்ஸ் ஷேர் மொபைல் ஆப் மூலமாக திருத்தம் செய்து, பிரின்டுக்கு அனுப்பலாம். தங்கம் மற்றும் வெள்ளி நிறங்களில் கிடைக்கும்.

மூலக்கதை