Autolib மகிழுந்துகள் விற்பனைக்கு வருகிறது!!

PARIS TAMIL  PARIS TAMIL
Autolib மகிழுந்துகள் விற்பனைக்கு வருகிறது!!

சேவை நிறுத்தப்பட்டதின் பின்னர், Autolib சேவைக்காக பயன்படுத்தப்பட்ட மகிழுந்துகள் தனிநபர் தேவைக்காக விற்பனைக்கு வருகின்றது. 
 
இந்த சேவைக்காக பயன்படுத்திய மகிழுந்துகள், கடந்த கோடை காலத்தில் இருந்து Romorantin (Loir-et-Cher) நகரில் உள்ள மிகப்பெரிய 'தரிப்பிடம்' ஒன்றில் தரித்து நிற்கவைக்கப்பட்டுள்ளது. தற்போது இவை விற்பனைக்கு வர உள்ளது. சாம்பல் நிற இந்த மகிழுந்தில் இருந்து Autolib எனும் ஒட்டிகள் அகற்றப்பட்டுளன. 
 
இங்கு 3,000 மகிழுந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து முதல்கட்டமாக 50 மகிழுந்துகள் விற்பனைக்கு வர உள்ளது. மின் சேமிப்பான் மற்றும் மின்னேற்றி ( battery, charger) இரண்டும் மகிழுந்துடன் வழங்கப்படும். ஒரு மகிழுந்தின் முதல்கட்ட விலை €3,700 களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும் இது €4,500 வரை அதிகரிக்கப்படலாம் எனவும் அறிய முடிகிறது. 
 
'ஒவ்வொரு மகிழுந்தும் தனித்தன்மை கொண்டது. ஒவ்வொரு மகிழுந்துக்கும் ஒவ்வொரு கதை உள்ளது. சில மகிழுந்துகளின் வெளிப்புறத்தில் கீறல்கள், கோடுகள் இருக்கலாம்.... ஆனால் மகிழுந்து ஒவ்வொன்றும் நல்ல இயக்கத்தில் உள்ளன!' என மகிழுந்துகளை ஏலத்துக்கு விடும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை