மக்ரோனிற்கு எதிராக மஞ்சள் சட்டைப் போராட்டம்

PARIS TAMIL  PARIS TAMIL
மக்ரோனிற்கு எதிராக மஞ்சள் சட்டைப் போராட்டம்

எதிர்வரும் 17ம் திகதி எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக, பிரான்சின் பல மாகாணங்களில் வாகனச் சாரதிகள் மஞ்சள் சட்டைப் போராட்டம் நடாத்த உள்ளனர்.
 
 
இதன் பூர்வாங்கமாக, போராட்டங்கள் ஆரம்பித்துள்ளன. 
 
 
முதலாம் உலகப் போரின் நூற்றாண்டு நிறவு நிகழ்வுகளில் எமானுவல் மக்ரோன் கலந்து கொண்டு வருவது வாசகர்கள் அறிந்த விடயமே.
 
இந்த வகையில் இன்று Somme பகுதியில் உள்ள Albert நகரத்திற்கு எமானுவல் மக்ரோன் சென்றிருந்த வேளையில், மஞ்சள் சட்டைப் போராட்டம் நடைபெற்றுள்ளது. 
 
இறுதியாகக் காவற்துறையினர், இந்த மஞ்சற்சட்டைப் போராட்டக்காரர்களை பலவந்தமாக வெளியேற்றி உள்ளனர்.
 

மூலக்கதை