சி.வி.சி.,யில் 2ம் நாளாக: சி.பி.ஐ., இயக்குனர் ஆஜர்

தினமலர்  தினமலர்
சி.வி.சி.,யில் 2ம் நாளாக: சி.பி.ஐ., இயக்குனர் ஆஜர்


புதுடில்லி: சி.வி.சி., எனப்படும், ஊழல் கண்காணிப்பு ஆணையர், கே.வி.சவுத்ரி தலைமையிலான குழு முன், சி.பி.ஐ., இயக்குனர் அலோக் வர்மா, நேற்று ஆஜராகி, தன் மீதான புகார்கள் குறித்து விளக்கம் அளித்தார்.சி.பி.ஐ., இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து, இருவரும், பரஸ்பரம் ஊழல் புகார்களை கூறினர்.
இதையடுத்து, இருவரும், பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர்.இருவர் மீதான புகார்களை, சி.வி.சி., விசாரித்து வருகிறது. நேற்று முன்தினம், இருவரும், சி.வி.சி., அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில், நேற்று இரண்டாம் நாளாக, சி.பி.ஐ., இயக்குனர் அலோக் வர்மா, சி.வி.சி., அலுவலகத்தில் ஆஜரானார்.அப்போது, தன் மீது கூறப்பட்டுள்ள புகார்கள் ஒவ்வொன்றுக்கும் தக்க விளக்கம் கூறி, அவற்றை, அலோக் வர்மா மறுத்ததாக கூறப்படுகிறது.நேற்றைய விசாரணையின்போது, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, விசாரணையை கண்காணிக்க நியமிக்கப்பட்டிருந்த, ஓய்வு பெற்ற நீதிபதி, ஏ.எம்.பட்நாயக்கும் உடன் இருந்தார்.

மூலக்கதை