சாரதி அனுமதி பத்திர கட்டணம் வெகுவாக குறைக்கப்படும்! - ஜனாதிபதி உறுதி!!

PARIS TAMIL  PARIS TAMIL
சாரதி அனுமதி பத்திர கட்டணம் வெகுவாக குறைக்கப்படும்!  ஜனாதிபதி உறுதி!!

சாரதி அனுமதி பத்திரம் பெற்றுக்கொள்ளுவதற்கான கட்டணம் வெகுவாக குறைக்கப்படும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார். 
 
இன்று வெள்ளிக்கிழமை பா-து-கலேயில் உள்ள Lens நகருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மக்ரோன், அங்கு வைத்தே இதனை குறிப்பிட்டுள்ளார். போக்குவரத்து தொடர்பான சீர்திருத்த சட்ட மசோதாவில் ஏற்பட உள்ள புதிய மாற்றம் குறித்து அறிவித்த மக்ரோன், 'சாரதி அனுமதி பத்திரத்தை விரைவாகவும், குறைந்த கட்டணத்திலும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்' என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கும் போது, 'சாரதி அனுமதி பத்திரத்துக்காக நீண்ட நாட்கள் காத்திருக்கவோ, €1500 அல்லது €1800 கட்டணமோ செலுத்தவேண்டியதில்லை! நாங்கள் இந்த கட்டணத்தை வெகுவாக குறைக்க உள்ளோம்' என ஜனாதிபதி குறிப்பிட்டார். 
 
இளம் நபர்கள் சாரதி அனுமதி பத்திரம் ஒன்றி வாகனங்களை செலுத்துவது பிரான்சில் அதிகரித்து வருகின்றமையும், அதன் தொடர்ச்சியாக விபத்துக்கள் ஏற்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை