மணம் வீசும் மலர்கள் விலை கிடுகிடு உயர்வு:முல்லை கிலோ ரூ.1,400, கனகாம்பரம் ரூ.1,300, மல்லிகை ரூ.1,200

தினமலர்  தினமலர்
மணம் வீசும் மலர்கள் விலை கிடுகிடு உயர்வு:முல்லை கிலோ ரூ.1,400, கனகாம்பரம் ரூ.1,300, மல்லிகை ரூ.1,200

தேனி:தேனியில் வளர்பிறை முகூர்த்தத்தால் பூக்களின் விலை எகிறி மல்லிகை கிலோ, 1,200 ரூபாய், கனகாம்பரம், 1,300 ரூபாய், முல்லை, 1,400 ரூபாய்க்கு விற்பனையானது.


தேனி, பழைய பேருந்து நிலைய பூ மார்க்கெட்டில், ஆண்டிப்பட்டி, கூடலுார், சின்னமனுார், தேவாரம், வருஷநாடு, பெரியகுளம் ஆகிய பகுதிகளில் இருந்து, பூக்கள் விற்பனைக்கு வருகின்றன.தினமும், 700 கிலோ வரும் முல்லைப்பூ வரத்து குறைந்து, 1 கிலோ மட்டுமே நேற்று வந்தது. இதனால், கிலோ, 1,400 ரூபாய்க்கு விற்பனையானது.தினமும், 1,300 கிலோ வரத்து உள்ள மல்லிகை, 5 கிலோ மட்டும் வந்ததால், விலை உயர்ந்து, கிலோ, 1,200 ரூபாய்க்கு விற்பனையானது.


கனகாம்பரம் வரத்து குறைந்து, கிலோ, 1,300 ரூபாய்க்கு விற்பனையானது.நேற்று வளர்பிறை முகூர்த்தத்தை ஒட்டி, தேவை அதிகரித்ததால், பூக்களின் விலை எகிறியதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

மூலக்கதை