வலைதள விற்பனையில் மஞ்சளுக்கு நல்ல விலை

தினமலர்  தினமலர்
வலைதள விற்பனையில் மஞ்சளுக்கு நல்ல விலை

ஈரோடு:ஈரோட்டில், தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்த நிலையில், மஞ்சள் ஏலம் நேற்று துவங்கியது. வரத்து குறைந்த நிலையில், வலைதள விற்பனையில், மஞ்சள் விலை, 100 ரூபாய் வரை உயர்ந்தது.


இது குறித்து, ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர் சங்கச் செயலர் சத்தியமூர்த்தி கூறியதாவது:ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி சொசைட்டி என, நான்கு இடங்களிலும், மஞ்சள் ஏலம் நேற்று நடந்தது. வழக்கமாக, ஒரு ஏலத்தில், 150க்கும் மேல் மாதிரிகள் வைக்கப்படும். நேற்று, 50 மாதிரி மட்டுமே வைக்கப்பட்டது.


வரத்து குறைவால், விலையில் பெரிய மாற்றமில்லை. விரலி குவின்டால், 8,000 ரூபாய்; கிழங்கு குவின்டால், 6,800 ரூபாய் வரை விலை போனது.ஆனால், வலைதள வர்த்தகத்தில், குவின்டாலுக்கு, 100 ரூபாய் வரை உயர்ந்தது. தொடர்ந்து மழை பெய்தால், உலர வைத்து, பதமாக மஞ்சளை எடுத்து வருவதில் சிக்கல் ஏற்படும். அப்போது வரத்து குறைந்து, விலை உயர வாய்ப்பாகும். தற்போது அதுபோன்ற நிலை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை