ராமேஸ்வரம்- சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
ராமேஸ்வரம் சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ராமேஸ்வரம்- சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் குறித்து தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் இடையே நவம்பர் 10ம் தேதி, ரயில் எண்:06053 இயக்கப்படுகிறது. இரவு 11 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயில் ராமநாதபுரம், மதுரை, திருச்சி, விருத்தாச்சலம், தாம்பரம் வழித்தடத்தில் இயக்கப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். 

அதே போல் கொல்லம் - விசாகப்பட்டினம் இடையேயான சிறப்பு ரயில் ரயில் எண்:08516 நவம்பர் 19,22,26,29ம் தேதிகளில், டிசம்பர் 3,6,10,17,24,27ம் தேதிகளிலும் அடுத்த ஆண்டு ஜனவரி 7,14,17 ஆகிய தேதிகளில்(13 நாட்கள்) இயக்கப்படுகிறது. 

இந்த ரயில் குறிப்பிட்ட தேதிகளில் காலை 10 மணிக்கு, கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, கோயம்புத்தூர், சேலம், காட்பாடி, திருத்தணி வழியாக மறுநாள் மாலை 6.30 மணிக்கு விசாகப்பட்டினம் சென்றடையும்.

மூலக்கதை