ரூ. 3000 கோடி எதிரிகள் சொத்து விற்பனை: ரவிஷங்கர் பிரசாத்

தினமலர்  தினமலர்
ரூ. 3000 கோடி எதிரிகள் சொத்து விற்பனை: ரவிஷங்கர் பிரசாத்

புதுடில்லி: ரூ. 3000 கோடி மதிப்பிலான எதிரிகள் சொத்து விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த, 1965 மற்றும், 1971ம் ஆண்டுகளில், பாகிஸ்தானுடன் இந்தியா போரிட்ட போது ஏராளமானோர், இந்தியாவில்இருந்து பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தனர். அவர்களுக்கு சொந்த மான சொத்துகள், இந்திய பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு வந்தன.அந்த சொத்துகளை, பாதுகாவலரின் கட்டுப்பாட்டில் நீடிக்கச் செய்யும் வகையில், 1968ல், எதிரிகள் சொத்து சட்டம் இயற்றப்பட்டது.தொடர்ந்து இச்சட்டத்தில் சில திருத்தங்களை செய்து அவசர சட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இந்த சட்டத்தின் கீழ் எதிரிகளின் பல்வேறு சொத்துக்களை விற்பதற்கு ஒப்புதல் கிடைத்ததையடுத்து ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகள் விற்கப்பட்டதாக வும், இதில் லக்னோவில் உள்ள ராஜா முகமதாபாத்திற்கு சொந்தமான சொத்துக்கள் தான் அதிக எண்ணிக்கையிலானது என மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின் மத்திய அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் கூறினார்.

மூலக்கதை