13 பேரை பலி வாங்கியவன் சுட்டுக் கொலை

தினமலர்  தினமலர்
13 பேரை பலி வாங்கியவன் சுட்டுக் கொலை

கலிபோர்னியா:அமெரிக்காவில், பிரபல மதுபான விடுதியில், 13 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற மர்ம நபரை, போலீசார் சுட்டுக் கொன்றனர்.
அமெரிக்காவின், தெற்கு கலிபோர்னியாவில், 'பார்டர்லைன் பார் அண்ட் கிரில்' என்ற பிரபல மதுபான விடுதி அமைந்துள்ளது. சமீபத்தில், இந்த மதுபான விடுதியில், கல்லுாரி மாணவர்கள் சார்பில், ஒரு நிகழ்ச்சி நடந்தது.அப்போது, மதுபான விடுதிக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவன், தான் மறைத்து வைத்திருந்த கைத் துப்பாக்கியால், அங்கிருந்தோரை சுட்டான். இந்த துப்பாக்கிச் சூட்டில், சம்பவ இடத்திலேயே, 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஏராளமானோர் காயம் அடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபரை சுட்டுக் கொன்றனர்.அமெரிக்காவில், பொதுமக்கள் கூடும் இடங்களில், மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இது போன்ற தாக்குதல்களுக்கு, மாணவர்கள் உட்பட, ஏராளமானோர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை