பாஜ மூத்த தலைவர் அத்வானி 91வது பிறந்தநாள்: பிரதமர் வாழ்த்து

தினகரன்  தினகரன்
பாஜ மூத்த தலைவர் அத்வானி 91வது பிறந்தநாள்: பிரதமர் வாழ்த்து

புதுடெல்லி: பாஜ மூத்த தலைவர் அத்வானி நேற்று தனது 91வது பிறந்த நாளை கொண்டாடினார். பாஜ.வின் முதுபெரும் தலைவர் அத்வானி. வாஜ்பாய் ஆட்சியின்போது துணைப் பிரதமர் பதவி உட்பட பல்வேறு பதவிகளை வகித்தார். இவர் கடந்த 1927ம் ஆண்டு தற்போது பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் பிறந்தவர். இவர்  நேற்று தனது 91வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு பாஜ மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.  பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,  ‘இந்தியாவின் முன்னேற்றத்தில் அத்வானியின் பங்கு முக்கியமானது. அவர் அமைச்சராக இருந்த காலகட்டங்களில் நாட்டின் எதிர்கால நலனை கருத்தில்  கொண்டு எடுத்த முடிவுகள், மக்கள் நல கொள்கைகள் போன்றவற்றால் பாராட்டப்பட்டார். அவரது அறிவு கூர்மை அரசியல் அரங்கில் போற்றப்படுகிறது’ என பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை