உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி

தினகரன்  தினகரன்
உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி

சென்னை : உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்த அனுமதி கோரியிருந்தனர். இதனை அடுத்து சேலம், ஈரோடு உள்ளிட்ட 6 மாவட்ட விவசாயிகள் போராட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. விவசாயிகள் அமைதி வழியில் போராட்டம் நடத்தவும், போராட்ட தேதியை ஒருவாரத்தில் தெரிவிக்கவும் அறிவுரை தந்துள்ளது.

மூலக்கதை