இம்மாதம் துருவநட்சத்திரம் சிங்கிள் டிராக்

தினமலர்  தினமலர்
இம்மாதம் துருவநட்சத்திரம் சிங்கிள் டிராக்

விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சாமி-2' படம் வர்த்தக ரீதியில் வெற்றியடையவில்லை. அடுத்தப்படியாக விக்ரம் நடிப்பில் உருவாகி பல ஆண்டுகளாக முடங்கிக்கிடக்கும் படம் 'துருவநட்சத்திரம்'.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் 'துருவநட்சத்திரம்' படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டது. இன்னும் 8 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கியுள்ளது. தற்போது விக்ரம், கமல் தயாரிப்பில் கடாரம் கொண்டான் படத்தில் நடித்து வருகிறார். அதனால் துருவ நட்சத்திரம் படம் முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

துருவ நட்சத்திரம் படம் எப்போது வெளியாகும் என்பதே தெரியாத நிலையில், 'துருவநட்சத்திரம்' படம் குறித்து ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ். படத்தில் இடம் பெறும் 'ஒரு மனம்...' என்று துவங்கும் சிங்கிள் டிராக் இந்த மாதம் விரைவில் வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தில் விக்ரமுடன், ரிதுவர்மா, ஐஸ்வர்யா, சிம்ரன், பார்த்திபன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

மூலக்கதை