8 ஆண்டுகள் கழித்தும் நிறைவேறாமல் போன சரண்யாவின் ஆசை

தினமலர்  தினமலர்
8 ஆண்டுகள் கழித்தும் நிறைவேறாமல் போன சரண்யாவின் ஆசை

தமிழில் நம்பர் ஒன் குணச்சித்திர நடிகையாக வலம்வரும் சரண்யா பொன்வண்ணன் தனது சொந்த மொழியான மலையாளத்தில் எட்டு ஆண்டுகள் கழித்து ஒரு படத்தில் நடித்துள்ளார். படத்தின் பெயர் 'ஒரு குப்ரசித பையன்'. டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் அவரது அம்மாவாக நடித்துள்ளார் சரண்யா.

இதில் செம்பம்மாள் என்கிற தமிழ் பெண்ணாகவே இவர் நடித்துள்ளதால் படத்தில் இவர் பேசுவது முழுவதும் தமிழ் வசனங்கள் தானாம். எட்டு ஆண்டுகள் கழித்து ஒரு படத்திலாவது மலையாளத்தில் பேசலாம் என ஆவலாக இருந்தவருக்கு இது கொஞ்சம் ஏமாற்றம் தான் என்றாலும், தமிழில் அவருக்கு வழங்கப்படுவது போல இந்தப்படத்திலும் அழுத்தமான கேரக்டரை கொடுத்துள்ளார்களாம். இந்தப்படம் நாளை (நவ-9) ரிலீஸாகிறது.

மூலக்கதை