மஞ்சு வாரியரை அசத்திய 96 வயது மூதாட்டி

தினமலர்  தினமலர்
மஞ்சு வாரியரை அசத்திய 96 வயது மூதாட்டி

சினிமா மட்டுமன்றி பல சமூக நல அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்து வரும் மலையாள நடிகை மஞ்சு வாரியர், தொடர்ந்து சமூக நல பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்தவகையில் கேரள அரசின் கல்வியறிவு பணியின் நல்லெண்ண தூதராகவும் பொறுப்பு வகித்து வரும் மஞ்சு வாரியரை, கேரளாவை சேர்ந்த 96 வயதான கார்த்தியாயினி அம்மா ரொம்பவே ஆச்சர்யப்பட வைத்து விட்டார்.

விஷயம் இதுதான். சமீபத்தில் .நடைபெற்ற 'அக்சரலக்சம்' என்கிற எழுத்தறிவு தேர்வில் கலந்து கொண்டு தேர்வெழுதிய இந்த மூதாட்டி 98 சதவீத மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இதை கேள்விப்பட்டு வியந்துபோன மஞ்சு வாரியர், நேரடியாக கார்த்தியாயினி அம்மாவின் வீட்டிற்கே சென்று அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் கார்த்தியாயினி அம்மா கேரளாவில் மட்டுமல்ல, மற்ற அனைத்து மாநிலங்களிலும் உள்ள பெண்களுக்கு ஒரு தூண்டுதலாக இருப்பார் என்றும் பாராட்டியுள்ளார்.

கார்த்தியாயினி அம்மாவின் விருப்பம் கம்ப்யூட்டரை இயக்க வேண்டும் என்பதுதான். இதை கேள்விப்பட்ட கேரளாவின் கல்வித்துறை மந்திரி தானே நேரில் சென்று அவருக்கு விலையுர்ந்த ஒரு லேப்டாப்பை பரிசாக அளித்து கௌரவப்படுத்தி உள்ளார்.

மூலக்கதை