சம்பளத்தைக் குறைத்த விஜய் ஆண்டனி

தினமலர்  தினமலர்
சம்பளத்தைக் குறைத்த விஜய் ஆண்டனி

'பிச்சைக்காரன்', 'காளி', 'திமிரு புடிச்சவன்', 'கொலைக்காரன்' என்று வித்தியாசமான தலைப்புகளில் நடித்து வரும் விஜய் ஆண்டனி, அடுத்து 'மூடர் கூடம்' படத்தை இயக்கிய நவீன் இயக்கத்தில் 'அக்னிச் சிறகுகள்' என்ற படத்தில் நடிக்கிறார்.

ஷாலினி பாண்டே கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், அருண் விஜய், நாசர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். டி.சிவாவின் 'அம்மா கிரியேஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது.

இதுவரை தன்னுடைய சொந்த தயாரிப்பில்(ஓரிரு படங்கள் விஜய் ஆண்டனி இணைந்து தயாரித்துள்ளார்) மட்டும் நடித்து வந்த விஜய் ஆண்டனி, தன்னுடைய சம்பளமாக 5 கோடியை நிர்ணயித்திருந்தார். அதன் அடிப்படையிலேயே படத்தின் பட்ஜெட்டை தீர்மானித்து படத்தை வியாபாரம் செய்து வந்தார்.

கடைசியாக அவர் நடித்த சைத்தான், அண்ணாதுரை, காளி படங்கள் ஓடாமல் போனதால் தற்போது வெளிப்படங்களில் நடிக்க முடிவு செய்து முதல் கட்டமாக அம்மா கிரியேஷன்ஸ் படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் அவருக்கு முன்பு வாங்கிய சம்பளத்தை விட குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை