கடாரம் கொண்டான் பெயர் பின்னணியில் வரலாற்று சிறப்பு

தினமலர்  தினமலர்
கடாரம் கொண்டான் பெயர் பின்னணியில் வரலாற்று சிறப்பு

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், அவரது உதவியாளர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கிய படம் 'தூங்காவனம்'. இந்த படத்தை தொடர்ந்து விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் படத்தை ராஜேஷ் எம்.செல்வா இயக்குகிறார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. 'கடாரம் கொண்டான்' என்று வித்தியாசமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் விக்ரம் வித்தியாசமான ஹேர்ஸ்டைலில் காட்சியளிக்கிறார். மிரள வைக்கும் விக்ரமின் தோற்றம், உடலில் டாட்டூ வரைந்திருப்பது எல்லாம் ஆளவந்தான் கமலை ஞாபகப்படுத்துவது போல் உள்ளது.

சமூகவலைதளங்கில் கடாரம் கொண்டான் பர்ஸ்ட் லுக்கை ரசிகர்கள் ஒருபுறம் கொண்டாடி மகிழ்ந்தாலும், மற்றொருபுறம் கிண்டலடிக்கப்பட்டு வருகிறது. மேலும், கடாரம் கொண்டான் என்றால் என்ன அர்த்தம் பலரும் இணையதளங்களில் தேடி உள்ளனர்.

இந்த பெயருக்கு பின்னர் ஒரு வரலாற்று சிறப்பே உள்ளது. அதாவது, தஞ்சாவூரில் உள்ள பெரிய கோவிலை கட்டிய ராஜராஜா சோழனின் மகனான ராஜேந்திர சோழன், மலேசியாவில் உள்ள கெடா பகுதி வரை போர் தொடுத்து, அதில் வென்று அந்த பகுதியை தன் வசப்படுத்தியதால் அவருக்கு 'கடாரம் கொண்டான்' என்று பெயர் வந்ததாம். இப்படியொரு வரலாற்று சிறப்புமிக்க பெயரை தான் படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளனர்.

மூலக்கதை