ராமேஸ்வரம் - சென்னை சிறப்பு ரயில் அறிவிப்பு : தெற்கு ரயில்வே

தினகரன்  தினகரன்
ராமேஸ்வரம்  சென்னை சிறப்பு ரயில் அறிவிப்பு : தெற்கு ரயில்வே

சென்னை : ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் இடையே மதுரை, திருச்சி வழியாக சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நவ 10-ம் தேதி இரவு 11மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10:45க்கு சென்னை எழும்பூர் வந்து சேரும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில் மண்டபம், ராமநாதபுரம், மானாமதுரை, மதுரை, கொடை ரோடு, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலின் முன்பதிவு நாளை (நவ 9) காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது.

மூலக்கதை